diabetisபல மருந்துகளை உட்கொள்வதைவிட ஒரு கூட்டு மருந்து எடுத்துக் கொள்வது ஒரு நோயாளிக்கு வசதியை ஏற்படுத்துகிறது. கடந்த மார்ச் 12ம் தேதி, கொரெக்ஸ் உள்ளிட்ட 344 மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் வினியோகத்தை சிறந்த ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட வல்லுனர் குழுவின் பரிந்துரையின்படி தடைசெய்து அறிவித்தது மத்திய சுகாதாரத் துறை. இதுகுறித்து நமது பத்திரிக்கை.காமில் செய்தி வெளீயிட்டிருந்தோம். இந்தத் தடாலடித் தடை நோயாளிகளிடையே எத்தகைய பக்க விளைவுகளை ஏற்படுத்துமென எண்டோகிரைனோலாஜிஸ்ட் எனும் நாளமில்லாச் சுரப்பு மருத்துவர் (Endocrinologist) களிடம் கருத்து கேட்டிருந்தோம். இந்தத் தடை ஒரு பாதகமான விளைவை ஏற்படுத்தலாம் எனவும், குறிப்பாக மருந்துகளின் தடையால் நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவு தாறுமாறாக எகிறக் கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர் மருத்துவர்கள்.
குளோபல் மருத்துவமனையின் டாக்டர் சினேகா கோத்தாரி ” இப்போது தடை செய்யப்பட்டுள்ளன 343 மருந்துகளில் 19-20 நீரிழிவு சிகிச்சைக்கு நேரிடையாகப் பயன்படுத்தப்பட்டன எனவும் சுமார் 30-40% மருந்துகளில் எதாவது ஒன்று அல்லது இரண்டும் நீரிழிவுக்கு பயன்படுத்தப் பட்டவையாகும்” என்று கூறினார். நிரிழிவு நோயாளிகள் தங்களது மற்ற பிணிகளுக்கு மருந்து உட்கொள்ளும்போது மருந்துகளின் இணக்கம் பெரும் தலைவலியாய் இருக்கும் எனத் தெரிவித்தார். இதனால் அவர்கள் உட்கொள்ளவிருக்கும் மருந்துகளின் எண்ணிக்கை உயரக்கூடும். அது பாதகமான விளைவை ஏற்படுத்தும். .”நீரிழிவு மேலாண்மையில் “உடன்பாடுகள் விகிதம்” ஒரு முக்கிய சிக்கலாக உள்ளது. பல நோயாளிகள் பல மருந்து திட்ட முறையைக் கடைபிடிக்கவேண்டுமாதலால், அவர்கள் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர். பொரஸ்கர் கூறுகையில் “பெரும்பாலான இந்த மருந்துகள், நோயாளிகளின் ஒவ்வாமை மற்றும் வசதியைப் பொறுத்தே சிபாரிசு செய்யப்பட்டு வந்தன. தற்பொழுது பல மருந்துகளை உட்கொள்ள வேண்டி இருப்பதால், அவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு உயரக்கூடும்” என வருத்தம் தெரிவித்தார். “நேரிடையான ஆதாரம் இல்லையெனினும், ஆன்டிபையாடிக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கக்கூடும் எனச் சுகாதார வல்லுனர்கள் அச்சம் தெரிவித்தனர்.
diabetis1
எல்லாவற்றையும் விட, கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாகப் புழக்கத்தில் இருக்கும் இந்த மருந்துகளின் விற்பனையை எப்படி மத்திய அரசு அனுமதித்தது என வினவுகிறார், ஒரு மூத்த மருத்துவர் எஸ்.எல். ரஹேஜா மருத்துவமனையின் ஒரு நாளமில்லா சுரப்பி மருத்துவர் டாக்டர் அனில் பொரொஸ்கார், “இந்தத் திடீர் தடை “பொது சுகாதாரம்” பற்றி அரசாங்கத்தின் அக்கறை நோக்கங்களுக்கு ஒத்தவையாக இல்லை என்றார். “அது தேவை இல்லாமல் நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை எகிற வைக்க வழிவகுக்கும். அதற்குப் பதிலாக, டாக்டர்கள் தங்களின் நோயாளிகளுக்கு சரியான மாற்று மருந்தினைத் தேர்வு செய்யப் போதிய காலஅவகாசத்தை கொடுத்து இந்தத்தடையை அமல்படுத்தி இருக்க வேண்டும், “என்று கூறினார். “திடீர் தடை விதிப்பது தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அரசு ஒரு மூன்று மாத அவகாசம் கொடுத்து, இம்மருந்துகளின் மருத்துவ ஆய்வுகள் மற்றும் பலாபலன்களை அறிவியல் சான்றுகளுடன் சமர்ப்பிக்க இந்நிறுவனங்கள் பணிக்கப் பட்டிருக்க வேண்டும்,” என்றார் டாக்டர்.
 
தொடர்புடையப் பதிவுகள்:

  1. 344 மருந்துகளுக்கு தடை