சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதை தொடர்ந்து, வருமான வரித்துறையினர் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர், தலைவர் மற்றும் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார், அதிமுக எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட 32 பேருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்றது.

கீதாலட்சுமி

அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள, ரெய்டு நடைபெற்ற வர்களை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறையினர் அலுவலகத்தில் ஆஜராகினர்.

ஆனால், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதற்கிடையில் வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து,  சென்னை உயர்நீதிமன்றத்தில் கீதாலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், தன்னுடைய வீட்டில் இருந்து தங்க நகை,  வெள்ளி பொருட்கள் தவிர வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதால் தனக்கு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

கீதாலட்துமி சமீபத்தில் பி.சி.ராய் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.