இரட்டை இலைக்கு லஞ்சம் : டில்லியில் கைது செய்யப்பட்டவர் யார் என்றே தெரியாது! தினகரன்

Must read

சென்னை,

ரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனுக்கு டில்லி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், டில்லியில் கைதான சுகேஷ் சந்தர் யார் என்றே தெரியாது என்றார்.

மேலும், நானும் ஊடகங்கள் மூலம்தான் இதுபோன்ற செயல் நடைபெற்றுள்ளதை அறிந்ததாகவும்,  இரட்டை இலை தொடர்பான தேர்தல் ஆணையத்தில் இன்று விசாரணை நடைபெற இருக்கிற வேளையில்,  சின்னம் தொடர்பாக  நான்  யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை என்றதார்.

கட்சியை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தம் மீது வீண் பழி போடப்பட்டுள்ளதாகவும், டில்லியில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்தர், தனக்கு யார் என்றே தெரியாத போது தான் அவரிடம் எப்படி பேரம் பேசியிருக்க முடியும் என்றும் கேள்வி விடுத்தார்.

இதுகுறித்து டில்லி போலீஸ் சம்மன் அனுப்பினால் சட்டப்படி சந்திக்கத் தயார் என்றார்.

மேலும், . கட்சிக்குள் எந்தவித நெருக்கடியும் இல்லை என்றும் சித்தி என்ற முறையிலும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையிலுமே வி.கே.சசிகலாவை சந்திக்க இன்று பெங்களூரு செல்வவதாகவும் கூறினார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article