சென்னை: ”கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டாம்” என  திமுக கூட்டணி கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணி, எழுத்தாளுமையை போற்றும்விதமாக, அவர் பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை பிரமாண்ட சிலையாக சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க திமுக அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கு `முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்’ என்று பெயரிடப்படவுள்ளது. இதற்காக சுமார் 81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதுடன்,  கடலில் அமையவிருக்கும் இந்த பேனா சிலைக்குச்செல்ல கரைமீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் என மொத்தம் 650 மீட்டர் தொலைவில், கடல்பரப்பிலிருந்து 6 மீட்டர் உயரத்தில் இரும்பாலான கண்ணாடிப் பாலம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்த நினைவுச்சின்னத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டம் கடும் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், எதிர்ப்பை மீறி பேனா சின்னம் அமைத்தால், அதை உடைப்பேன் என பகிரங்கமாக கூறினார்.

இந்த நிலையில், இன்று திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சிபேனா சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் கோ. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு, பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணிகளை  தொடரக்கூடாது,  ”பேனா நினைவுச் சின்னம் கடலுக்குள் அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி உள்ளார்.

மேலும்,   கலைஞருக்கு நினைவுச் சின்னம் வைக்கக்கூடாது என்பது எங்கள் கருத்தல்ல. ஒரு பொது இடத்தை தேர்வு செய்து அங்கு கலைஞரின் பேனா சின்னத்தை வைக்கலாம். ஆனால் கடலுக்குள்ளே வைப்பதுதால்தான் சர்ச்சையை உருவாகிறது. இதனால் கடலுக்குள் நினைவுச் சின்னம் வைக்க வேண்டாம், அதற்கான பணிகளை தொடர வேண்டாம் என அறிவுறுத்துவதாக கூறினார்.

பலநூறு பேர் கலந்துகொண்ட பேனா நினைவு சின்ன கருத்துக்கேட்பு கூட்டத்தில் 22 பேர் பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவு…