மது போதையில் பணிக்கு வந்த மருத்துவர் பணியிடை நீக்கம்

ஞ்சாவூர்

திருவையாறு அரசு மருத்துவமனையில் மது போதையில் பணிக்கு வந்த மருத்துவர் பணியிடை நிக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஒரு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு மெகபூப் பாஷா என்னும் மருத்துவர் பணி புரிந்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு பணிக்கு அவர் மதுபோதையில் வந்துள்ளார். நடக்கக் கூட முடியாத நிலையிலொரு அறையில் உள்ள கட்டிலில் படுத்து தூங்க ஆரம்பித்துள்ளார்.

மருத்துவமனைகு அச்சமயத்தில் பல நோயாளிகள் அவசர சிகிச்சைக்கு வந்துள்ளனர். ஆனால் மருத்துவர் மெகபூப் பாஷா சிகிச்சை செய்ய வ்ரவில்லை. ஊழியர்கள் சென்ற போது அவர் அறைக்கதவை பூட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. பல முறை கதவைத் தட்டியும் அவர் கதவை திறக்கவில்லை.

அப்போது ஒரு சிலர் இதை புகைப்படம் எடுத்து முதன்மை மருத்துவருக்கு புகார் அனுப்பி உள்ளனர். அதை ஒட்டி நடந்த விசாரணையில் முதன்மை மருத்துவர் பரிந்துரையின் பேரில் மெகபூப் பாஷா பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் மேலும் தண்டனை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
Doctor came to duty after drinking was suspended