மேகதாது அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை: கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார்

பெங்களூரு:

மேகதாது பகுதியில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக பகுதியில் உள்ள மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்தில், பெங்களூரு குடிநீர் பிரச்சினையை காரணம் காட்டி அணையின் அவசியம் குறித்து  வலியுறுத்தி உள்ளது.

கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார்

கர்நாடகாவின் அணை கட்டும் திட்டத்துக்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது வில் அணை கட்டினால், தமிழக விவசாயத்திற்கு வரும் சொற்ப தண்ணீரும் நிறுத்தப்பட்டு விடும் என்று கூறி வருகிறது.

இந்த நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார்,  காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கவே, மேகதாதுவில் அணை கட்ட விரும்புகிறோம். இதற்காக மத்திய நீர் ஆணையத்தை முறைப்படி அணுகி இருக்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த அணை கட்ட  நாங்கள், தமிழக அரசிடம் இதற்கு ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை. மேகதாதுவில் அணை கட்டினாலும், தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்படாது என்றும்  அவர் கூறியிருக்கிறார்.

கர்நாடகாவில் காவிரி நீரை சேமித்து வைக்க ஏற்கனவே 4 அணைகள் உள்ள நிலையில், தற்போது 5வது அணையை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. காவிரி நிரை நம்பியே தமிழகததில் டெல்டா பாசனம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த சர்ச்சை பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு முறையும் காவிரியில் தண்ணீர் திறந்துவிட கோரி கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கெஞ்ச வேண்டிய சூழல் உள்ளது.

இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டினபால், தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கும் கொஞ்சம் நஞ்சம் தண்ணீரும் தடுக்கப்பட்டு விடும். இதை கருத்தில்கொண்டுதான் மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு  திட்டமிட்டுள்ளது

கர்நாடகாவில் காவிரி குறுக்கே தண்ணீர் தேக்கி வைக்க 4 அணைகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் காவிரி தண்ணீரை தேக்கி வைக்க மேட்டூர் அணை மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Do not need approval from the Tamilnadu to build a dam in mekedatu: said Karnataka Minister d.k.shivakumar, மேகதாது அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை: கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார்