நச்சுக்கலந்த நீரில் விவசாயம் செய்ய மாட்டோம் – விவசாயிகள்

பெங்களூரு பகுதியில் உள்ள விவசாயிகள் நச்சுக்கலந்த தண்ணீரில் காய்கறிகளை அறுவடை செய்ய விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் உள்ள ஏரிகளில் டாக்சிக் அமிலம் கலந்துள்ளதால், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது அவை நச்சுத்தன்மை உடையதாக மாறுகின்றன. இதனால் நிலத்தில் விளையும் காய்கறிகள் மனிதனின் உடலுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

bengaluru

பெங்களூருவில் உள்ள கோலர் மற்றும் சிக்கபல்லபூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு கே.சி. பள்ளத்தாக்கு வழியாக ஏரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. ஏரி நீரில் முற்றிலும் கெமிக்கல் கலந்து இருப்பதாக கூறும் விவசாயிகள் மனிதனின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மறுத்துள்ளனர்.

கோலார் மற்றும் சிக்கபல்லப்புரா பகுதிகளில் அதிகளவில் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு விளைவிக்கப்படுகிறது. இது நாடு முழுவதும் உள்ள பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவைகள் மட்டுமில்லாது கேரட், பீட்ரூட், பீன்ஸ், கத்தரிக்காய், ஸ்வீட் கார்ன், கோஸ், காலிஃப்ளவர், கீரைகள் உள்ளிட்டவைகளும் அறுவடை செய்யப்படுகின்றன. தற்போது கெமிக்கல் கலந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்தினலும் அனைத்து பொருள்களும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறக்கூடும்.

இது குறித்து தோட்டக்கலை வல்லுநரான ஹிட்டலாமணி கூறுகையில் “ இந்த பகுதிகளில் நித்தடிநீர் மிகவும் ஆழத்திற்கு சென்று விட்டது, ஆனாலும் மண் வளம் தூய்மையாகவும், நன்றாகவும் உள்ளது. பெங்களூரில் உள்ள ஏரிகளில் இருந்து கேசி பள்ளத்தாக்கு திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வந்தால் விளைநிலங்கள் முற்றிலும் பாதிப்படையும். நீரில் உள்ள ரசாயனங்கள் விளைபொருள்களையும், நிலங்களையும் முற்றிலுமாக அழிக்கவல்லது” என்று கூறினார்.

மேலும், கே.சி. பள்ளத்தாக்கு திட்டத்தில் மூலம் அதிக அளவிலான தண்ணீரை விளை நிலங்களுக்கு செலுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இந்த திட்டம் செயல்பட்டால் காய்கறிகள் நன்கு வளரும், அவைகள் பார்ப்பதற்கு அழகாக தெரிய கூடும். ஆனால் அவை அனைத்தும் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கபவையாக இருக்கும். நச்சு நீர் கலந்த காய்கறிகள் பல்வேறு உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார்.

இந்த பிரச்சனை குறித்து நீர்வளத்துறை நிபுணர்கள் பேசும்போது,” கெமிக்கல் கலந்த சோப்புகள், சாம்புகள், கைக்கழுவும் திரவம் , ஷேவிங் கிரீம் மற்றும் சில டிடர்ஜெண்டுகள் ஏரிகளில் கலக்கப்படுகின்றன. இவைகள் தாரவரங்களையும், நிலங்களையும் மாசுப்படுத்துகின்றன. இது போன்ற கெமிக்கல் கலந்த பொருள்கள் உபயோகிப்பதை 50 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கத்திய நாடுகள் தடை செய்துள்ளன. நிலம் மற்றும் விவசாயம் மீது அக்கரை கொண்டுள்ள நாம் இதுவரை கெமிக்கல் கலந்த பொருள்கள் பயன்படுத்துவதை தடை செய்வதற்கு காலம் தாழ்த்தி வருகிறோம்” என்று தெரிவித்தனர்.

கோலர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கே.சி. திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரில் விவசாயம் செய்யப்போவதில்லை என்றும், மழைநீரை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாகவும் பிடிவாதமாக கூறியுள்ளனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-