(பைல் படம்)

சென்னை,

மீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை வைத்து விளம்பரம் செய்யக்கூடாது என தமிழக அரசு தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வு முடிவு கடந்த 12ந்தேதி வெளியானது. இந்த ஆண்டு முதன்முறையாக தேர்வு முடிவுகள் கிரேடு முறையில் வெளியிடப்பட்டது.

இதன் காரணமாக முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது மாணவ, மாணவிகள் யார் என்பது விளம்பரப்படுத்து வது தடுக்கப்பட்டது. மாணவ மாணவிகளிடையே ஏற்படும் வேறுபாட்டை களைவதற்காக இந்த முறை நடைமுறைப்படுத்துவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஒருசில பள்ளிகளில், தங்கள் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் பேனர் வைத்து ஆள் பிடிக்க தொடங்கி உள்ளனர். பல தனியார் பள்ளிகளில்  பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில்,  10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை வைத்து விளம்பரம் செய்யக்கூடாது என்றும், விளம்பர பதாகைகளை வைப்பதற்கும் , ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கும் அரச தடை விதித்துள்ளதாகவும், மீறி பேனர்  வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.