சென்னை :

த்திய அரசின் புதிய கல்விக்கொள்கை மற்றும், மருத்துவ நுழைவு தேர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

மருத்துவக்கல்வி நுழைவு தேர்வு (நீட்) மற்றம் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து வரும் ஜனவரி 20ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூடியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சியும், முடக்கமும் தொடர்கின்ற இன்றைய நிலையில், சென்ற முறை ஏமாந்து போன தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு நம் பக்கம் திரும்பியுள்ளது.

தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கான பணிகளை நாம் சிரம் மேல் தாங்கி விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்; வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நமது செயல்பாடுகள் தொடர வேண்டும். எதையும் ஜனநாயகப்பூர்வமாக செயல்படுத்தக் கூடிய கழகம், மக்களின்  எதிர்பார்ப்புகளையும்  விரைந்து நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து செயல்படும்.

களத்தில் விளையவிருக்கும் செயல்பாடுகளுக்கு உரமாகின்றன உங்களின் வாழ்த்துகள். இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்து இயக்கப் பணிகளைத் தொடர்கிறேன்.

நீட் தேர்வு மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக திமுக சார்பில் ஜனவரி 20 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தமிழகம் முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மதம் சார்ந்த கல்வி கொள்கைகளை மத்திய அரசு திணிக்கப் பார்க்கிறது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.