சென்னை:

மிழகத்தில் இந்து அமைப்பின் ரத யாத்திரையை அனுமதி அளித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்ட மன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ஸ்டாலின் தலைமையில், சட்டமன்றம் எதிரே உள்ள காமராஜர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.

சட்டமன்றத்தில் திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் பதில் அளித்த நிலையில், அது திருப்தியளிக்கவில்லை என்று சட்டமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

அதையடுத்து அவர்களை சபையில் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அதையடுத்து சபைக் காவலர்களால் வெளியேற்றப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலகம் எதிரே உள்ள காமராஜர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவல் துறையினர் உடடினயாக போக்குவரத்தை மாற்றி விட்டனர்.

சாலை மறியல் செய்துவந்த ஸ்டாலின் உள்பட திமுகவினரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

சாலை மறியல் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது தடைசெய் தடை செய் ரத யாத்திரையை தடை செய் என்றும் கோஷமிட்டனர்.