சாலைப் பணிகளை சம்பந்திக்கு அளித்தாரா முதல்வர் ? : திமுக புகார்

சென்னை

திமுக வழக்கறிஞர் பாரதி தமிழக அரசின் நெடுஞ்சாலை திட்டங்களில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

திமுக வை சேர்ந்த வ்ழக்கறிஞர் ஆர் எஸ் பாரதி.   இவர் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம்  புகார் ஒன்றை அளித்துள்ளார்.   அந்த புகாரில் தமிழக அரசின் நெடுஞ்சாலை திட்டங்களில் ஆயிரம் கோடிகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் உடனே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு :

1.   ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலை அமைக்க ரூ.713 கோடிக்கு பதில் ரூ.1515  கோடி ஒதுக்கீடு செய்ததாகவும், சாலை பணிக்கான தொகையை அதிகமாக்கி, முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மகனின் மைத்துனர் இயக்குநராக உள்ள நிறுவனம் ஒப்பந்தத்தை  பெற்றுள்ளது.

2.   நெல்லை- செங்கோட்டை-கொல்லம் சாலைக்கு ரூ.470 கோடிக்கு பதில் ரூ.720 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை- செங்கோட்டை சாலைக்கு முதல்வர் எடப்பாடி   சம்பந்தி வெங்கடாசலபதி நிறுவனம் மட்டுமே ஒப்பந்தம் கோரியது, இதனையடுத்து  எடப்பாடி சம்பந்திக்கு இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

3.   ராமநாமபுரம், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து எடப்பாடி சம்பந்திக்கு மட்டுமே ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

4.   மதுரை மாவட்டம் ரிங் ரோடு சாலைப்பணியை பாலாஜி டால்வேஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

5.   சென்னை-வண்டலூர்-லாலாஜபாத் சாலை பணி ஒப்பந்ததம் முதல்வர் சம்மந்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

6.   தமிழக முதல்வர் 5 நெடுஞ்சாலைப்பணிகளில் 2 திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். 5 திட்டங்களில் 2 திட்டங்கள் சம்பந்திக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புகார்களின் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாலைத் திட்ட ஒப்பந்தங்களில் தனது சம்பந்திக்கு முன்னுரிமை அளித்ததாக திமுக குற்றம் சாட்டி உள்ளது.
English Summary
DMK complained about Scam in TN Highways project