ராமேஸ்வரம்:
தை அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர், மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

நாட்டின் முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக தை மற்றும் ஆடி அமாவாசை நாட்கள், புரட்டாசி மகாளய அமாவாசை, மாதாந்திர அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். அமாவாசை அன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

இந்நிலையில், தை அமாவாசையான இன்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பல்லாயிரக்கணக்கான றைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

மேலும், கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய சாமி தரிசனம் செய்தனர்.