உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : குரூப் ஜி விவரங்கள்

மாஸ்கோ

லகக் கோப்பை கால்பந்து போட்டி 2018ல் விளையாடப் போகும் குரூப் ஜி பிரிவில் உள்ள நாடுகள் குறித்த விவரங்கள் இதோ

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 கள் தொடங்க இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன.    இந்தப் போட்டிகளில் மொத்தம் எட்டு பிரிவுகளில் 32 நாட்டு அணிகள் விளையாட உள்ளன.     ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி எச் என பிரிக்கப்பட்ட இந்த பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் 4 நாட்டு அணிகள் இடம் பெற்றுள்ளன.    நாம் இந்த செய்தியில் ஜி பிரிவில் உள்ள நாடுகளைப் பற்றி பார்ப்போம்.

குரூப் ஜி:

பெல்ஜியம்

கெவின் டி புருய்ன்

பெல்ஜியம் அணி ஒரு திறமை மிக்க அணி என அனைவராலும் பாராட்டுப் பெற்ற அணியாகும்.   ஆனால் இது வரை இந்த அணி அரை இறுதிக்குள் நுழைந்ததே இல்லை.    திறமை இருந்தும் இதுவரை வெற்றி பெறாத இந்த அணி இம்முறை இந்த அணியின் வீரர்களான ஈடன் ஹஸார்ட், மற்றும் திபௌத் கோர்டாயிஸ் மூலம் நிச்சயம் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.

பெல்ஜிய அணியின் முக்கிய வீரர் கெவின் டி புருய்ன் மற்றும் ஈடன் ஹஸார்ட் இருவரும் இணையும் இரண்டாம் போட்டி என்பதால் எதிர்பார்ர்பு அதிகம் உள்ளது.

இந்த அணியின் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸ்.   ஏற்கனவே இந்த அணி யூரோ 2016 போட்டிகலில் தோல் வி அடைந்த பின் அணிக்கு பயிற்சியாளர் ஆனவர்.

பனாமா

லூயிஸ் தெஜடா

பனாமா அணி முதல் முறையாக தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றதால் அந்நாட்டுக்கு தேசிய விடுமுறை விடப்பட்டது.  மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் மொத்த மக்கள் தொகை வெறும் 40 லட்சம் பேர் மட்டுமே.   ஆனால் இந்த மத்திய அமெரிக்க்க நாடு  32 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவுக்கு முன்பு தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த அணியின் முக்கிய வீரரான லூயிஸ் தெஜடா இதுவரை 43 கோல்கள் அடித்துள்ளார்.

இந்த அணியின் பயிற்சியாளர் ஹெர்மன் டாரியோ கோம்ஸ் கொலம்பியா நாட்டை சேர்ந்தவர்.  ஏற்கனவே 1998 ல் கொலம்பியாவை வெற்றி பெற வைத்துள்ளார். அதன் பிறகு 2002ல் ஈக்குவடார்.  தற்போது பனாமாவின் பயிற்சியாளர்.

துனிசியா

யூசுஃப் மசாக்னி

துனிசியா 12 ஆண்டுகள் கழித்து தகுதிச் சுற்றில் வென்றுள்ளது.  புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களை கொண்ட இந்த அணியில் சில அனுபவமுள்ள வீரர்காளுமுள்ளனர்.

இந்த அணியின் முக்கிய வீரரான யூசுஃப் மசாக்னி தகுதிச் சுற்றில் தனது திறமைய நிரூபித்த 27 வயது இளைஞர் ஆவார்.

இந்த அணியின் பயிற்சியாளர் நபில் மாலௌல் கடந்த 2002 போட்டியில் துனிசியாவின் பயிற்சியாளருக்கு உதவியாளராக இருந்தவர்.

இங்கிலாந்து

ஹாரி கேன்

ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புடன் இங்கிலாந்து அணி களம் இறங்குகிறது.   உலகின் மிகவும் பணக்கார மற்றும் புகழ்பெற்ற அணியாக இருந்த போதிலும், இந்த அணியின் மேலாளர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் இடையில் ஒரு நிழல் யுத்தம் நிகழ்வது வெற்றியை பாதிக்கலாம்

இந்த அணியின் முக்கிய வீரரான ஹாரி கேன் உலகின் புகழ் பெற்ற வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றவர்.

இந்த அணியின் பயிற்சியாளர் கரேத் சௌத்கேட் கடந்த 2016 செப்டம்பர் மாத்தில் இருந்து பயிற்சியாளராக அணியை தயார் செய்து வருகிறார்.  துணிச்சலான முடிவுகள் எடுப்பதற்கு இவர் அஞ்சுவதே இல்லை.

குரூப் எச் குறித்த விவரங்களை அடுத்த செய்தியில் காண்போம்

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Details of FIFA team playing in group G
-=-