கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பணமதிப்பிழப்பு….மம்தா தாக்கு

கொல்கத்தா:

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு தான் பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்டதா? என்று மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 31 சதவீத வாக்குகளை பெற்று 283 இடங்களை கைப்பற்றியது. இதேபோல் 2019 நாடாளுமன்ற தேர்தல் அமையாது. ஆட்சிக்கு வரும் முன்பு பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை.

தற்போது நாடு முழுவதும் இந்து கிளர்ச்சியாளர்கள் உருவாகிவிட்டனர். அவர்களால் பல்வேறு அப்பாவி பொதுமக்கள் அடித்து கொலை செய்கின்றனர். நாடு ஒற்றுமையாக இருப்பதையே விரும்புகிறோம். இந்து கிளர்ச்சியாளர்களை ஆதரிக்க கூடாது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 99.3 சதவீத செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்கிளுக்கு திரும்பிவிட்டன. அப்படி என்றால் பணமதிப்பிழப்பு கொண்டு வந்ததன் நோக்கம் என்ன?. கருப்பு பணத்தை எல்லாம் வெள்ளையாக்க தான் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதா? சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கு காரணம் என்ன?’’ என்று கேள்வி எழுப்பினார்.
English Summary
demonitaisation implement for to change black money in to white money says mamatha banerjee