தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்துவிடுங்கள்: உச்சநீதி மன்றம் காட்டம்

டில்லி:

தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்துவிடுங்கள்: மத்திய அரசு மற்றும் மாநில அரசான உத்தரபிரதேச மாநில அரசுக்கும் உச்சநீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக உலக அதிசயங்களில் ஒன்றாதான  தாஜ்மகால் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பான வழக்கில், தாஸ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்று நேற்று உத்தர விட்டது.  உச்சநீதி மன்றம்.

இன்றைய விசாரணையின்போது தாஜ்மகாலை பாதுகாக்க முடியா விட்டால் இடித்து விடுங்கள் அல்லது அதை நாங்கள் மூட உத்தரவிடட்டுமா  என்று மத்திய மாநில அரசுகளுக்கு கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்தது.

இந்த வழக்கில்,  தாஜ்மகாலை பாதுகாப்பது குறித்த விளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த விசாரணை யின்போது  உத்தரவிட்டிருந்தது.

ஆனால் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் போதிய விவரங்கள் இல்லை என்ற கடுமையாக சாடிய  நீதிபதிகள், தாஜ்மகாலை பாதுகாக்க விருப்பம் இல்லா விட்டால் அதனை இடித்து விடுங்கள் என்று மத்திய அரசு வழக்கறிஞரை கண்டித்தனர்.

மேலும்,  தாஜ்மகால் மாசுபட என்ன காரணம், அதனை தடுப்பது எப்படி என்பதைக் கண்டறிய சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வருகிற 31-ம் தேதி முதல் இந்த வழக்கு தினசரி விசாரிக்கப்படும் என்றும் கூறினர்.

Tags: Demolish Taj Mahal, Supreme Court condemns to centre and up state, தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்துவிடுங்கள்: உச்சநீதி மன்றம் காட்டம்