ஜெனிவா

லக அளவில் 104 நாடுகளில்  டெல்டா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்.

மாறுபட்ட கொரோனா வைரஸ் ஆன டெல்டா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.    இது வரை 104 உலக நாடுகளில் இந்த வகை வைரஸ் பரவல் காணப்படுகிறது.   இந்த வைரஸ் தொற்று மற்றும் மரண எண்ணிக்கை நாளுக்கு நள் அதிகரித்து வருகிறது.  இது குறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் அவர், “கடந்த 4 வாரங்களாக உலக அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  குறிப்பாக தற்போது உலக அளவில் டெல்டா வைரஸ் பெருமளவில் பரவி வருகிறது.   இதுவரை 104 நாடுகளில் இந்த வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.  இந்த டெல்டா வைரஸ் தினசரி பரவல் எண்ணிக்கை மற்றும் உயிர் இழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்கம் தடுப்பூசி விநியோகம் குறைவாக உள்ள நாடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது.   அந்த நாடுகளில் இந்த வைரஸ் பரவலால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.   ஏராளமான நாடுகள் தடுப்பூசிகள் பற்ற்றக்குறையை எதிர்கொண்டு வருகின்றன.  இந்நிலையில் பணக்கார நாடுகள் மூன்றாம் டோஸ் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசித்து வருவது மிகவும் தவறானதாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.