t20வருகின்ற மார்ச் 30-அன்று நடைபெறவுள்ள 20 ஓவர் உலக கோப்பையின் முதல் அரை இறுதி ஆட்டத்திற்கு பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் உள்ள சர்ச்சைக்குரிய ஆர்.பி. மெஹ்ரா பிளாக்கை பயன்படுத்தத் தில்லி உயர் நீதிமன்றம் அனுமதிக்க மறுத்துவிட்டதால், இங்கு இந்தப் போட்டி நடைபெறுமா எனும் கேள்விக்குறி எழுந்துள்ளது.,
முன்னதாக, அரையிறுதிப் போட்டி நடக்கும் மைதானம் இடமாற்றப் படும் என அஞ்சி, DDCA அதிகாரிகள், திங்கட்கிழமையன்று டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி, ஆர்.பி. மெஹ்ரா பிளாக்கை பயன்படுத்தச் சிறப்பு அனுமதி கோரியிருந்தனர்.
தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (DDCA) அதிகாரிகள் சிக்கலைத் தீர்க்கும் முயற்சியாக இதுகுறித்து புதன்கிழமை ஐசிசி அதிகாரிகளைச் சந்திக்க உள்ளனர்.
தில்லியில் நடைபெறும் இருபது -20 உலகக் கிண்ணம் போட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உயர் நீதிமன்றம், முகுல் முட்கலை பார்வையாளராக நியமனம் செய்து இருந்தது, DDCA பொருளாளர் ரவீந்தர் மன்சண்ந்தா, இதற்கிடையில் DDCA நீதிபதி (ஓய்வு) முகுல் முட்கலுக்கு ஒரு உத்திரவாதக் கடிதம் எழுதியுள்ளது. அதில் மெஹ்ரா ப்ளாக்கின் பாதுகாப்பு மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதாகக் கூறப்பட்டுள்ளது. நீதிபதி முட்கல் ஒரு நல்ல முடிவை எடுப்பாரென நம்புவதாக அவர் தெரிவித்தார்.
DDCA
நீதிமன்றம், முந்தைய வாய்வழி உத்தரவில், DDCA தெற்கு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் (SDMC) அனுமதி வாங்கும் வரை மெஹ்ரா பிளாக் ஒரு அங்கீகரிக்கப்படாத அமைப்பாகவே இருக்கும் என்றும் கூறினார். செவ்வாயன்று, அது SDMC நிறைவு சான்றிதழ் வாங்கியப் பிறகே பொதுமக்கள் பயன்படுத்த மெஹ்ரா பிளாக்-கை DDCA திறக்க வேண்டும் என நீதிமன்றம் தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. நீதிபதி முட்கலுக்கு மெஹ்ரா பிளாக் திறக்க ஒப்புதல் கொடுக்க அதிகாரமில்லையென நீதிமன்றம் DDCAக்கு மீண்டும் தெளிவாக அறிவுறுத்தி உள்ளது. DDCA நிறைவுச் சான்றிதழ் இல்லாமல் எந்தக் கட்டிடம் பயன்படுத்த வழங்க முடியாது,” உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் டிவிஷன் பெஞ்ச் DDCA விற்கு ஆலோசனை கூறினார்.
எனவே உரிய முறையில் DDCA அதன் மனுவினைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
நீதிபதி முட்கல் மெஹ்ரா பிளாக் பற்றித் தனது நிலைப்பாட்டை மாற்றச் சாத்தியமே இல்லை. “அது [மெஹ்ரா பிளாக்] ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதால், முட்கல் மிகத்தெளிவாக, ஊடகவியளாலர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. கேமராக்களின் கோணங்களை மாற்ற முடியாது, ஏனெனில். மெஹ்ரா பிளாக் பந்துவீச்சாளர் கைக்குப் பின்னால் உள்ளது,” என அதிகாரி கூறினார். விளம்பரத் தட்டிகள் வைக்க எந்தப் பிரச்சினையையும் நீதி முட்கல் எழுப்பப்படவில்லை என்று தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
ஐ சி சி தலைவர் டேவ் ரிசர்ட்சனிடம் தெளிவாக நீதிபதி முட்கல் தமது முடிவினைத் தெரிவித்துவிட்டார் எனவும் கூறப்படுகின்றது.
டெல்லியில் போட்டி நடைபெறுமா என்பது  இன்று தெரிந்துவிடும்.