டில்லி:

முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் மீதான ஐஆர்டிசி குத்தகை முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட லாலு, அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டில்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

லாலுவின் மனைவி மற்றும் மகன்

முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரக இருந்த  லாலு பிரசாத் யாதவ்,  கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டுவரை  மத்திய ரயில்வே அமைச்ச ராக இருந்தபோது, ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கில்,   லாலு பிரசாத் யாதவ்,மற்றும் அவரதுசூ குடும்பத்தினர் மற்றும் ஐஆர்சிடிசி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகையை பாட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்படலாம் என அஞ்சிய லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் ஜாமின் கோரி டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இது மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, லாலுவின் உடல்நிலை குறித்து அவரது மருத்துவர்கள் நீதிபதியிடம் எடுத்துரைத்தனர். அதைத்தொடர்ந்து, லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை பிப்ரவரி 11ந்தேதி ஒத்தி வைக்கப்பட்டது.