ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டில்லியில் தமிழர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம்!

Must read

டில்லி,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக டில்லியில் தமிழர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி உலகம் முழுவதும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று காலை டில்லி ஜந்தர் மந்தரில் தமிழர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்து  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் டெல்லியிலும் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் இன்று தமிழக முதல்வரை சந்தித்த பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு குறித்து உறுதியாக முடிவு எதுவும் கூறவில்லை. இதன் காரணமாக ஜல்லிக்கட்டு போராட்டம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article