டெல்லி விமான நிலையத்தில் ஆர்டி.எக்ஸ் வெடிகுண்டு பார்சல்! நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Must read

டெல்லி:

டெல்லி சர்வதேச விமானநிலையத்தில் அனாமேதயமாக கடந்த பை ஒன்றில் இருந்து  ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், டில்லி உள்பட நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 3வது டெர்மினல் பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் கருப்பு நிறப் பை ஒன்று அனாமேதயமாக கிடந்தது. இதை கண்ட பாதுகாப்பு படை வீரர், அதை எடுத்து  மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தார்.

அப்போது,அந்த பையினுள்  வெடிபொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதிகாரிகள் விரைந்து வந்து, ஆர்டிஎஸ் பார்சலை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, டில்லி விமான நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும்,பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த மர்ம பையைக் கொண்டு வந்தது யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு நடைபெற்று வருகிறது.

More articles

Latest article