டெல்லி: துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட டெல்லி ஷரத்தா கொலை வழக்கில் 6,629 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில், காதலானால் காதலி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  ஷரத்தா என்ற இளம் பெண் துண்டு துண்டாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியும் காதலுனுமான அப்தாப் அமீன் கைது செய்யப்பட்டார். விசாரணையில்,  மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த அப்தாப் அமீன் புனேவாலா மற்றும் ஷரத்தா ஒன்றாக பணியாற்றி டில்லியில் வசித்து வந்தனர்.

இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட காரணத்தால், கடந்தாண்டு (2022)  மே மாதம், 18ம் தேதி ஷ்ரத்தா, அவரது காதலனால் 35 துண்டுகளாக கொடூரமாக கொல்லப்பட்டார். அப்தாப்பை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். அவரது வெட்டப்பட்ட உடல் பாங்களை தேடி வந்தனர். இதில் சில பகுதிகள் மட்டுமே கிடைத்தன.. நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் குற்றவாளி அப்தாப் மீது டில்லி போலீசார் 6 ஆயிரத்து 629 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில் 3000 பக்கங்களில் 100-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், கொலையாளி அப்தாப் பயன்படுத்திய கூர்மையான ஆயுதங்கள், புதைத்து வைத்திருந்த எலும்பு கூடுகளை தடயவியல் அறிவியல் சோதனைக்கு உட்படுத்திய அறிக்கை விவரங்கள் உள்ளன.

இந்த வழக்கு விரைவில் தொடர் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.