டெல்லி டேர்டெவில்ஸ் அணி ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ ஆக பெயர் மாற்றம்

ஐபிஎல் தொடரில் இடம்பெற்றிருந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பெயர் ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ என மாற்றப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பெயர் மாற்றத்துடன் களமிறங்க உள்ளது.

delli

இந்தியாவின் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ஒன்று. இந்த அணி 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்து விளையாடி வருகிறது. எனினும் ஒரு போட்டியில் கூட டெல்லி டேர்டெவில்ஸ் பெரிதளவில் சாதிக்கவில்லை.

இந்நிலையில் வரும் 18ம் தேதி ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி அணியின் 50 சதவிகித பங்குகளை ஜிண்டால் சௌத் வெஸ்ட் ஸ்போட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதையடுத்து டெல்லி அணியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் டெல்லி அணியின் பெயர் மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பெயர் ’ டெல்லி கேபிடல்ஸ் ‘ என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-