ஆணவக் கொலை: கணவன் மனைவிக்கு தூக்கு தண்டனை

Must read

நெல்லை:

ஜாதி மாறி திருமணம் செய்த தலித் வாலிபரின் சகோதரியை கொலை செய்த தலையாரிக்கும் அவரது மனைவிக்கும் தூக்கு தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.


திருநெல்வேலி வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கு வயது 27. ரயில்வே ஊழியர். இவரும் நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த தலையாரி சங்கரநாராயணன் மகள் காவேரியும் காதலித்தனர். 2016ம் ஆண்வு மே 3ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

மகள் எங்கு தேடியும் கிடைக்காததால் சங்கரநாராயணனும், அவரது மனைவி செல்லம்மாளும் வண்ணாரபேட்டையில் உள்ள விஸ்வநாதன் வீட்டிற்கு சென்றனர். அங்கு விஸ்வநாதனின் அக்கா கல்பனா இருந்தார். காவேரி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று கல்பனா கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சங்கரநாராயணனும், செல்லம்மாளும், கல்பனாவை வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்து விட்டு ஓடிவிட்டனர். இறந்த கல்பனா கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலித் வகுப்பை சேர்ந்த விஸ்வநாதனை காவேரி திருமணம் செய்துகொண்டதால் இந்த ஆணவக் கொலை நடந்தது.

இந்த வழக்கில் சங்கரநாராயணன், செல்லம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கின் விசாரணை நெல்லை 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் நடந்தது. இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article