தனுஷின் ‘மாரி 2’ பட ட்ரைலர் வெளியீடு

யக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து, தயாரித்திருக்கும் “மாரி 2”   படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாலாஜிமோகன் – தனுஷ் இணைந்து உருவாக்கிய “மாரி” திரைப்படம் கடந்த 2015ம் வருடம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது.

இதயடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் மாரி 2  அதே கூட்டணியில் உருவானது.   இத்திரைப்படம் இம்மாதம் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் தனுஷுடன்  சாய் பல்லவி, வரலட்சுமி, மலையாள நடிகர் டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.  ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இளையராஜா ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

இந்நிலையில்  இப்படத்தின் டிரெய்லர்  இன்று வெளியிடப்படும் என்று இயக்குநர் பாலாஜிமோகன் தனது ட்விட்டர் பக்கத்தில்  அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாரி 2  படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

 

#danush #mari2 #trailer #released

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: danush-in-mari-2-trailer-released, தனுஷின் ‘மாரி 2’ பட ட்ரைலர் வெளியீடு
-=-