நியூசிலாந்தை தாக்கிய ‘கேப்ரியல்’ புயல்! பல பகுதிகள் இருளில் மூழ்கியது…

நியூசிலாந்தை தாக்கிய ‘கேப்ரியல்’ புயல் காரணமாக அந்நாட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்கியது, இது இந்த நூற்றாண்டின் அதிதீவிர புயல் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டை கேப்ரியல் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இதனால் நாடு முழுவதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. புயலை தொடர்ந்து, ஆக்லாந்து உள்ளிட்ட 5 பிராந்தியங்களில் பேய்மழை கொட்டித்தீர்த்தது. புயலைத் தொடர்ந்து நாடு முழுவதும் நியூசிலாந்து அரசு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது. … Continue reading நியூசிலாந்தை தாக்கிய ‘கேப்ரியல்’ புயல்! பல பகுதிகள் இருளில் மூழ்கியது…