அபாய அளவை தாண்டியது: இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறப்பு

இடுக்கி:

சியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான கேரள மாநிலத்தின் இடுக்கி அணை தனது முழுக் கொள்ளளவை எட்டி அபாய அளவை தாண்டியதால், 26 ஆண்டுகளுக்கு பிறகு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. நேற்று ஒரு மதகு மட்டும் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு உள்ளன.

இந்த அணை இதற்கு முன் 1981-ம் ஆண்டும், 1992-ம் ஆண்டும் ஆகிய  இருமுறை மட்டுமே இடுக்கி அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியதால், திறக்கப்பட்டுள்ளது அதன்பின் 26 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான்  திறக்கப்பட்டு உள்ளது.

இடுக்கி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 2401.6 அடியை கடந்தது. இதனால் அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 7 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதுபோலவே செருதோணி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. வெள்ள நீர் அடுத்த சில மணிநேரத்தில் எர்ணாகுளம் மாவட்டத்துக்குள் வரும் என்பதால் தேவையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சியாவின் பெரிய அணைகளில் ஒன்றானதும்,  அரை வட்டம் (ஆர்க்) வடிவிலானதுமான அணை இடுக்கி அணை, தற்போது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணை திறக்கப்பட்டுள்ளது. .  இடுக்கி மாவட்டத்தில் உள்ள  குறவன் குறத்தி என்ற இரண்டு ராட்சச மலைகளுக்கு இடையில் இந்த அணை கட்டப்பட்டது. இதுதான் ஆசியாவில் இருக்கும் மிகப் பெரிய ஆர்க் அணைகளில் ஒன்றாகும்.

கேரளாவின் தண்ணீர் தேவைக்காகவும், மின்சார தேவைக்காகவும் 1960ம் ஆண்டு இந்த அணை  கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டுபயன்பாட்டுக்கு  வந்தது. இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், இடுக்கி யில் உள்ள மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப்பயன்படுகிறது. இந்த நீர்மின் நிலையத்தில் இருந்து 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. செருதோனி, குலமாவு ஆகிய இரு அணைகளையும் இணைத்து, இடுக்கி அணை கட்டப்பட்டு உள்ளது. 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளவு 72 டிஎம்சி ஆகும்.

வளைவு வடிவ அணைகளில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரியது இடுக்கி அணை. கடந்த 1969-ம் ஆண்டு அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு இடுக்கி அணை வந்தது.

இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், இடுக்கியில் உள்ள மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப் பயன்படுகிறது. இந்த நீர்மின் நிலையத்தில் இருந்து 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 72 டிஎம்சி ஆகும்.

இந்த அணையின் மொத்த தண்ணீரும் மின்சாரம் எடுக்கப்பட்ட பின்பு, வேறு எந்த விவசாய பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுவதில்லை. உபரி நீர் முழுவதம் மொத்தமாக சென்று கடலில் கலந்து விடுகிறது. இடுக்கி அணையில் தற்போதுள்ள 72 டிஎம்சி நீரும் கடலில் சேன்று வீணாக கலக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
English Summary
Crossing the Dangerous water level: 5 tunnels opened of the Idukki dam