பாலியல் புகாரில் சிக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ அணியில் இருந்து விலகல்

பாலியல் புகாரில் சிக்கிய போர்ச்சுக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்நாட்டு அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

ronaldo

போர்ச்சுக்கல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2009ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் உள்ள நட்சத்திர விடுதியில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா புகார் அளித்துள்ளார். மேலும், அவர் பாலியன் வன்கொடுமை செய்ததை மறைக்க ரூ.3 கோடி வரை பணம் தருவதாக தன்னிடம் பேரம் பேசினார் என்றும் கேத்ரின் மேயோர்கா கூறியுள்ளார்.

இதனையடுத்து லாஸ்வேகாஸ் நீதிமன்றம் ரொனால்டோ 20 நாட்களில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் கால்பந்து உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ரொனால்டோ இந்த புகாரை முற்றிலுமாக மறுத்துள்ளார். மேயோர்காவின் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் தன் நற்பெயரை கெடுக்க சதி வேலை நடப்பதாகவும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த புகார் காரணமாக எதிர்வரும் நட்பு ரீதியான நடைபெறும் போட்டிகளில் பங்கேறும் போர்ச்சுக்கல் அணியில் ரொனால்டோ இடம் பெறவில்லை. போர்ச்சுக்கல் அணி வரும் அக்டோபர் 11ம் தேதி போலந்து அணியுடமும், அதன்பின் ஸ்காட்லாந்து அணியுடனும் நட்பு ரீதியான போட்டிகளில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-