தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் இ.கம்யூ பங்கேற்கும் : முத்தரசன் அதிரடி

Must read

சென்னை:

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.


உச்சநீதிமன்ற தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால் ஆதரிப்போம் என அரசியல் கட்சி தலைவர்கள் அறிவித்து வருகின்றனர். இந்த வகையில் பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜ் ஆதரவு தெரிவித்திருந்தார். நாம் தமிழர் கட்சி தலைனர் சீமானும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனும், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் அதில் பங்கேற்போம் என கூறினார். மேலும், தமிழர்களின் பண்பாட்டை குலைக்கும் சதியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது என மேலும் நாட்டு மாடுகள் இனத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article