புதுடெல்லி:

கொரோனா வைரஸ் குறித்து முழுமையாக படித்து வருகிறோம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மூத்த சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்க குறைந்தது இரண்டு ஆண்டுகளாகும். மேலும் இந்த வைரசை கிளினிக்கில் முறையில் சோதனை செய்ய அனுமதி பெற வேண்டியுள்ளது. இந்த வைரஸ் நாட்டில் 17 வெளிநாட்டவர்கள் உட்பட 74 பேரை பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) பிரிவின் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்கள் -1 (ஈ.சி.டி-ஐ) பிரிவு தலைவர் ராமன் ஆர்.கங்ககேத்கர் தெரிவிக்கையில், கொரோனா வைரஸை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெற்றிகரமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தடுப்பூசி தயாரிப்பது அவசியமான ஒன்றாகும். இந்த தடுப்பூசி தயாரிப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நீங்கள் மரபணுவின் வளர்ச்சியை பார்த்து அதற்கேற்ப தடுப்பூசி தயாரிக்க வேண்டும். அப்படி தயாரிக்கப்பட்டால், அது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிவகுக்கும். அல்லது பொதுவான ஒரு தடுப்பூசியை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும், இதை எளிதாக உருவாக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்துவது கடினமான ஒன்றாகவே இருக்கிறதும் என்றும் டாக்டர் கங்ககேத்கர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய விஞ்ஞானிகளின் முயற்சிகள் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இருந்தாலும், இந்த வைரஸ் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

வைரஸ் பாதிப்புக்கு சில தடுப்பூசிகள் வழங்கப்பட்டாலும், நோய்த்தொற்று ஏற்படும்போது, நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

இது வளர்ந்து வரும் வைரஸ், நாங்கள் அதைப் பற்றி இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், வைரஸ் பரவுவதை எங்களால் முடிந்தவரை முயற்சிக்க எடுத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிக வெப்பநிலை வைரஸைக் கொல்கிறதா? என்ற
கேள்விக்கு பதிலளித்த அவர், அப்படி கூறி விட எந்த ஆய்வும் ஆதாரமும் இல்லை என்று கூறினார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி தனிமைப்படுத்தப்படுவது அவசியம். அப்படி தனிமை படுத்தாமல் விட்டு விட்டால், பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரின் வாழ்க்கையையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு இருப்பது கண்டறியப்படாமல் அது குறித்து ஆய்வு செய்ய ஐ.சி.எம்.ஆர் கண்காணிப்பு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.