டெல்லி: இந்தியா வரும் 82 நாடுகளைச் சேர்ந்த வெளிநாடு பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த புதிய விதிமுறைகள் வரும் 14ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  82 நாடுகளைச் சேர்ந்த பயணிகள்,  முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு புறப்படுவதற்கு முன் ஆர்டி-பிசிஆர்  சோதனை இல்லை என்றும் ஆனால், அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கிரீனிங் மேற்கொள்ளப் படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தொற்று இரு ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது ஓரளவு கட்டுக்குள் இருப்பதால், பல நாடுகள்  கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. இதனால் உலக நாடுகள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றன.

இதையடுத்து பல்வேறு நாடுகள் மீண்டும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், கொரோனா தடுப்பூசி 2 டோஸ் எடுத்துக்கொண்டவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது என்று  சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 14ந்தேதி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் தளர்வுக்கு  பிறகு இந்தியாவிற்கு சர்வதேச வருகையாளர்களுக்கான மிகப்பெரிய தளர்வாக, அரசாங்கம் பிப்ரவரி 14 முதல் 82 நாடுகளில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையில்  கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்ட சான்றிதழை பதிவேற்றினால் போதும் என தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் எந்த ஒரு தடையும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கில் புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளதாகவும்,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒமிக்ரான் தொற்று பரவல் தொடங்கியபோது ‘கொரோனா ஆபத்து அதிகமுள்ள நாடுகள்’ பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. தற்போது அவை நீக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும், 8வது நாள் அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்படும் என விதி இருந்தது. தற்போது அவை நீக்கப்பட்டு,  அதற்கு பதிலாக, 14 நாள்கள் வரை தங்களை தானே சுயமாக கண்காணித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாறுதலுக்குள்ளாகும் கொரோனாவை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்று அறிவுறுத்திய சுகாதாரத்துறை  அமைச்சகம்  இந்த புதிய பாதுகாப்பு வழிமுறைகள் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில்,  ஸ்கிரீனிங்கின் போது அறிகுறிகள் கண்டறியப்பட்ட பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார நெறிமுறையின்படி மருத்துவ வசதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். சோதனை நேர்மறையாக இருந்தால், அவர்களின் தொடர்புகள் வரையறுக்கப்பட்ட நெறிமுறையின்படி அடையாளம் காணப்பட்டு நிர்வகிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுய-சுகாதாரக் கண்காணிப்பில் உள்ள பயணிகள், கோவிட் நோய்க்கான அறிகுறிகளையும் அறிகுறிகளையும் உருவாக்கினால், அவர்கள் உடனடியாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்குத் தெரிவிக்க வேண்டும்  அல்லது தேசிய உதவி எண் (1075)/ மாநில உதவி எண்ணுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு பயணியும் அறிக்கையின் நம்பகத்தன்மையைப் பொறுத்து ஒரு அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் கண்டறியப்பட்டால் குற்றவியல் வழக்குக்கு பொறுப்பாவார்கள்.

வீடு/நிறுவன தனிமைப்படுத்தல்/சுய-சுகாதாரக் கண்காணிப்புக்கு உட்பட்டு வருவதற்குப் பிந்தைய எந்தவொரு தேவைக்கும் உரிய அரசாங்க அதிகாரியின் முடிவிற்குக் கட்டுப்படுவார்கள் என்று அவர்கள் பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் மூலம் போர்ட்டலில் உறுதிமொழி கொடுப்பார்கள்.

மேலும்,  புதிய விதிகளின்படி, கடந்த 14 நாள்கள் வரையிலான பயண விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை  “அனைத்து பயணிகளும் (அ) ஆன்லைன் ஏர் சுவிதா போர்ட்டலில் முழுமையான மற்றும் உண்மைத் தகவலை சுய அறிவிப்பு வடிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

(https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration)

திட்டமிடப்பட்ட பயணத்திற்கு முன், கடந்த 14 நாட்கள் பயண விவரங்கள் உட்பட…. (ஆ) எதிர்மறையான Covid-19 RT-PCR அறிக்கையைப் பதிவேற்றவும்* (பயணத்தை மேற்கொள்வதற்கு 72 மணிநேரத்திற்குள் சோதனை நடத்தப்பட்டி ருக்க வேண்டும்) அல்லது கோவிட்-19 தடுப்பூசியின் முழு முதன்மை தடுப்பூசி அட்டவணையை முடித்ததற்கான சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், மாலத்தீவுகள், நியூசிலாந்து, நெதர்லாந்து, கத்தார், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்பட சீனாவும் ஐக்கிய அரபு அமீரகமும் 82 நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.