புது டெல்லி:
ங்கிகளில் கடன் வாங்கியோர் 3 மாதங்களுக்கு இஎம்ஐ கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்த்தார். அப்போது வங்கிக் கடன் நிலுவைகளுக்கு, 3 மாதம் கழித்து தவணை செலுத்த வங்கிகள் அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதம் குறைப்பட்டுள்ளதாகவும், ரெப்போ விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 4.40% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரெப்போ விகிதம் குறைப்பால், வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தும் என்றும், ரிசர்வ் வங்கி ஊழியர்களில் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

பொருளாதார நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று தெரிவித்த அவர், 5.15 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாக குறைப்பு4.9 சதவீதமாக இருந்த ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.