சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும்  அதிகரித்து வருகிறது, பொதுமக்கள், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி  கடைபிடிப்பது அவசியம் என்று சென்னையில் காய்ச்சல் முகாமை தொடங்கி வைத்த தமிழ்நாடு சுகாததாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் காச்சலை தடுக்க மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது,.  சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காய்ச்சல் தடுப்பு முகாமை தொடக்கி வைத்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்தபோது,  தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் 2 பேருக்கு மட்டுமே இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 25ஐ தாண்டி உள்ளது. இதனால்,  பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் மக்கள் பாதுகாப்புடன் இருப்பது நல்லது.

இதனால் பொதுமக்கள் பதட்டம் கொள்ள தேவையில்லை என்றவர், பொதுமக்கள்,  கொரோனா தடுப்பு விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை  பொதுஇடங்களில் பின்பற்றுவது நல்லது.  இதை  பின்பற்றினாலே இன்ஃப்ளூயன்ஸா தொற்று பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் , காய்ச்சல் பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு பரவாது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.