சென்னை:
சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. கடந்த 16 மணி நேரத்தில், மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளனர்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை முன்பு இருந்த அளவை விட குறைந்து கொண்டு வருவதாக தெரிகிறது. மேலும் பாதிப்பையும் உயிரிழப்பையும் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது  85,859 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 69,382 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 15,042  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
அதுமட்டுமின்றி, சென்னையில் நேற்று  ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,434  ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் (நேற்று மாலை 6 மணி முதல் காலை 10 மணி வரை)   சிகிச்சைப்பலனின்றி மேலும்  18 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் 17 பேரும் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒருவரும் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.