5-12 வயதிற்குட்பட்டவர்களுக்கு Corbevax என்ற கோவிட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி தற்போது 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல் ஈ நிறுவனத்தின் கார்பிவாக்ஸ் தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) பரிந்துரைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இதனை அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் பயோலாஜிக்கல் ஈ நிறுவனத்தின் கார்பிவாக்ஸ் தடுப்பூசியை நிபந்தனைகளுடன் அவசரகாலத்திற்கு பயன்படுத்துவது குறித்த பரிந்துரைகளை விவாதிக்க இந்த குழு கூடியது.

DCGI ஒப்புதலை அடுத்து 5 முதல் 12 வயதினருக்கான தடுப்பூசியைத் தொடங்க மத்திய சுகாதார அமைச்சகம் இறுதி ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.