சென்னை: ராகுல்காந்தி தமிழ்நாட்டின் கூடலூர் வழியாக 2வது கட்டமாக 2 நாள் மேற்கொள்கிறார். அதற்கான முன்னேற்பாடுகள் செய்ய திருவள்ளுர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர் 25ந்தேதி முதல் 30ந்தேதி வரை கூடலூரில் முகாமிட்டு பணிகளை மேற்கொள்வதாக அறிவித்து உள்ளார். அவரது பயணம் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

நாட்டில் ஒற்றுமையை வலியுத்தி, குமரி முதல் காஷ்மீர் வரையிலான  150 நாட்கள் பாதயாத்திரைiய ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். 12மாநிலங்கள் , 5 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கி ஏறக்குறைய 3500 கி.மீ தூரத்தை கடக்கிறது. இந்த பாதயாத்திரையானது 150 நாளில் நிறைவடையும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

குமரியில் செப்டம்பர் 7ந்தேதி மாலை யாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி 3 நாட்கள் தமிழ்நாட்டில் பாதயாத்திரை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் மட்டும் 18 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி,  கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலம் செல்ல, கூடலூர் வழியாக பயணம் மேற்கொள்கிறார்.

அதன்படி, 29ந்தேதி அன்று கேரளாவில் இருந்து, 2வது கட்டமாக தமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லைப்பகுதியான கூடலூர் மாவட்டத்துக்கு வருகை தருகிறார். தொடர்ந்து, அன்று மாலை கூடலூரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து 30ந்தேதி 30ந்தேதி முதுமலை வனவிலங்கு சரணாலயம் வழியாக கர்நாடக எல்லைக்குள் செல்கிறார்.  இந்த 2வது கட்ட தமிழக பாத யாத்திரைக் கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்து வருகிறது.

அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கூடலூர் ஏற்பாடுகளை செய்ய திருவள்ளுர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் 25ந்தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர் செல்கிறார். அங்கு  தமிழக எல்லைக்கு வரும் ராகுல் காந்தியை வரவேற்பதற்கான  ஏற்பாடுகளை செய்கிறார்.

இதையடுத்து வரும் 29ந்தேதி அன்று பிற்பகல் கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் ராகுல் காந்தியை வரவேற்கிறார். தொடர்ந்து அவருடன் நடைபயணம் மேற்கொள்ளும் ஜெயக்குமார், அன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அன்று இரவு கூடலூரில் ராகுல் உள்பட அனைவரும் தங்கி ஓய்வெடுக்கின்றனர்.

தொடர்ந்து,. 30ந்தேதி காலை மீண்டும் பயணத்தை தொடங்கும் ராகுல் முதுமலை வனவிலங்கு சரணாலயம் வழியாக கர்நாடக மாநிலம் செல்கிறார். அப்போது, அவரை தமிழக கர்நாடக எல்லையில் வழி அனுப்பி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், அவருடன் பல ஆயிரக்கணக்கான  காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்துகொள்கின்றனர்.

 

150 நாட்கள் பாரத் ஜோடா யாத்திரை: தமிழகத்தில் 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் ராகுல்காந்தியின் பயணத்திட்டம்.. முழு விவரம்….