காங்கிரஸ் இஸ்லாமிய கட்சியா? ராகுல்காந்திக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி

டில்லி:

ராகுல் முஸ்லிமாக இருக்க விரும்புகிறாரா என்று இஸ்லாமிய பத்திரிகை செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், மதம், பிரிவினை என அச்சுறுத்தலை காங்கிரஸ் ஏற்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சியா என்பதை ராகுல் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும்,  ராகுல் காந்தி “இப்போது முஸ்லீம்களான தஹ்ரி என்று சொல்லலாமா?” என்று ஒரு உருது தினசரி பத்திரிகை செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டில்லியில் செய்தியாளர்களை நிர்மலா சீதாராமன், சமீபத்தில் இஸ்லாமிய மத அறிஞர்கள் குழு ஒன்றை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  சந்தித்தாக உருது செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சியா என்பதை ராகுல் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு 1947ம் ஆண்டு நிகழ்ந்த பிரிவினையை போன்ற அச்சுறுத்தலை விளைவிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தார்.  காங்கிரஸ் கட்சி மதத்தின் பெயரால் ஆபத்தான விளையாட்டை விளையாடுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சமூக நல்லிணக்கத்துக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பாகும். வரும் மக்களவை தேர்தலில் ஆக்கப்பூர்வமான போட்டி இருந்தால் மிகவும் நல்லது. 2019-ஆம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் மத ரீதியிலான பிளவுபடுத்தலுடன் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என்ற அமைச்சர்

ராகுல் மற்றும்  சில காங்கிரஸ்  தலைவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள், பேச்சுக்கள் குறித்த செய்திகளை பார்க்கும் பொழுது, நாட்டின் பழைய கட்சியான காங்கிரஸ் மீண்டும் தனது பழைய கொள்கையான இந்தியாவை பிரித்தாளும் மனப்பான்மைக்கு சென்று விட்டதுபோன்ற தோற்றம் உருவாகி வருகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகள்  முன்பெல்லாம் இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் முயற்சியாக அது இருந்தது. ஆனால், தற்போது,  அது கட்சியின் பெயர் மற்றும் அடையாளமாகவே மாறி விட்டதாகத் தெரிகிறது என்று குற்றம் சாட்டினார்.

ராகுலின் இஸ்லாமிய மத தலைவர்களுடனான சந்திப்பு, இந்து பாகிஸ்தான் குறித்த சசி தரூரின் பேச்சு ஆகியவை காங்கிரசில் என்ன நடக்கிறது என்பது குறித்து அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Congress is an Islamic party? Nirmala Sitharaman question to Rahul Gandhi, காங்கிரஸ் இஸ்லாமிய கட்சியா? ராகுல்காந்திக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி
-=-