சிபிஐக்கு அடுத்து மத்திய அரசுடன் முரண்படும் ரிசர்வ் வங்கி

டில்லி

த்திய அரசு சிபிஐ மீது நடவடிக்கை எடுத்து அந்த அமைப்பின் தன்னாட்சியை குறைத்தது போல் ரிசர்வ் வங்கியையும் கையாளுவதாக குற்றம் எழுந்துள்ளது.

 

தன்னாட்சியாக செயல்பட்டு வந்த சிபிஐ அமைப்பின் இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ்  அஸ்தானாவுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.   அத்துடன் அஸ்தானா மீது ஒரு வழக்கில் லஞ்சம் பெற்றதாக வழக்கு சிபிஐ அமைப்பால் தொடரப்பட்டது.   அதை ஒட்டி மத்திய அரசு தலையிட்டு இருவரையும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது.  புதிய இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு அனைத்து எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.    சிபிஐ அமைப்பின் தன்னாட்சியை மத்திய அரசு  பெருமளவில் குறைத்து விட்டதாக பல தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.    தற்போது மற்றொரு  சுதந்திரஅமைப்பான ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும்  இடையே முரண்பாடுகள் முற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து நிதி ஆலோசக்ர் ஒருவர், “சென்ற வருடம் மட்டும் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் ஆறு முறை முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.    முக்கியமாக இந்த முரண்பாடு நிரவ் மோடி விவகாரம், வட்டி விகித மாற்றம், பொதுத்துறை வங்கிகளை முறைப்படுத்துதல் அகியவைகளில் மிகவும் அதிமாக இருந்துள்ளது.

முந்தைய இயக்குனர் ரகுராம் ராஜன்  பதவி விலகிய போதே பல சர்ச்சைகள் எழுந்தன.    அதனால் பிரதமர் மோடி தனது குஜராத் மாநிலத்தவரான உர்ஜித் படேலை  ஆளுநராக்க முயன்று வெற்றி பெற்றார்.    ஆனால் அவர் மத்திய அரசுக்கு ஆதரவாக இல்லை என கூறப்படுகிறது..   மத்திய அரசு  உர்ஜித் படேல் மீது நடவடிக்கை எடுத்தால் சர்ச்சைகள் மேலும் அதிகரிக்கும் என்பதால் யோசித்து வருகிறது.

சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரல் ஆசார்யா, “மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு தர வேண்டிய சுதந்திரத்தை தருவதில்லை” எனக் கூறி உள்ளார்.   இது மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் உள்ள பனிப்போரை உறுதி செய்துள்ளது.

தற்போது இந்தியா கடுமையான பொருளாதார சிக்கலில் உள்ளது.   இந்நிலையில் நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியுடன் அரசு முரண்பாடு கொள்வது  தவறானது.   அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் அதிகரிப்பது இந்த சிக்கலை மேலும் கடுமையாக்கும்” என தெரிவித்துள்ளார்.
English Summary
Conflict between RBI and Govt strengthening like CBI