பர்மிங்காம்:
காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது இந்திய அணி. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தொடந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, இந்திய அணி 152 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. இருப்பினும் வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கல பதக்கம் உட்பட மொத்தம் 55 பதக்கங்களுடன் இந்தியா 5 வது இடத்தில் நீடித்து வருகிறது.