கோவை மாணவி மரணம்: தம்பிதுரை மனைவியை தப்பவைக்க பயிற்சியாளர் பலிகடா?

நியூஸ்பாண்ட்:

சோகமான முகத்துடன் வந்த நியூஸ்பாண்ட், “ஒரு அப்பாவி கல்லூரிமாணவியின் உயிரை பறித்துவிட்டார்களே…!” என்றபடியே தனது இருக்கையில் அமர்ந்தார்.

“கோவை தொண்டாமுத்தூர் கலைமகள் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி என்ற பெயரில் மாணவி லோகேஸ்வரி பலியானதைத்தானே  சொல்கிறீர்?” என்றோம்.

“ஆம்..” என்பதுபோல தலையாட்டினார் நியூஸ்பாண்ட்.

நாம், “பயிற்சி அளித்த ஆறுமுகம் என்பவர்,  போலி நபர் என்று ஒரு தகவல் உலாவருகிறதே!” என்றோம்.

“ஆம்..! பயிற்சி அளித்த ஆறுமுகம், தங்களது வாரியத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று பேரிடர் மேலாண்மை வாரிய  நிர்வாகம் அறிவித்துவிட்டது.

இறுதி நிமிடங்களில் லோகேஸ்வரி..

இவர் தனியார் அமைப்பில்தான் பணியாற்றிவருகிறார். மற்றபடி ஏற்கெனவே இவர் பல கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்திருக்கிறார். அதற்குரிய படிப்பை படித்திருக்கிறார் என்கிறார்கள்!”

“ஓ..”

“அதே நேரம், அவர் பேரடர் மேலாண்மை பயிற்சி அளிக்க தகுதியான நபர் அல்ல. அவரது சான்றிதழ்கள் போலி..  அவர் அளித்த முகவரியும் போலி என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்! தவிற மாற்றுத்திறனாளியான அவர் எப்படி பயிற்சியாளராக முடியும் என்றும் கேட்கிறார்கள்!”

“அடக்கொடுமையே..!”

ஆறுமுகம்

“அதே நேரம்.. இந்த ஆறுமுகம் கடந்த சில வருடங்களாகவே பல கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மை பயிற்சி அ:ளித்திருப்பதோடு, இது குறித்த விழிப்புணர்வு உரைகளையும் ஆற்றியிருக்கிறார். இதெல்லாம் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்துக்கு தெரியாமலா இருக்கும் என்றும் கேட்கிறார்கள்!”

“சரியான கேள்விதான்..!”

“ஆம்..    இதற்கு முன்பே 2017ல் ஒரு முறையும், 2018 ஜூலை 3ம் தேதியும் கோவை கல்லூரியில் அனுமதி கோரி கடிதம் கொடுத்துள்ளார். பிறகு, ஏற்கெனவே தான் பயிற்சி அளித்த வீடியோ காட்சிகளைக் காண்பித்து பயிற்சி அளிக்க கலைமகள் கல்லூரியல் அனுமதி பெற்றிருக்கிறார்! ஆனால்…”

“என்ன, ஆனால்..?”

”தகுதி இன்றி பயிற்சி அளித்தது ஆறுமுகத்தின் தவறு என்றால், அவர் குறித்த முழு விவரங்களை அறியாமல் பயிற்சி அளிக்க அனுமதித்தது  கல்லூரி நிர்வாகத்தின் தவறு அல்லவா என்றும் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது!”

“நியாயமான கேள்விதானே!”

“கல்லூரியில் அசம்பாவிதம் நடந்தால், கல்லூரி முதல்வர், தாளாளர் வரை விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் விசாரணை முழுதும் பயிற்சியாளர் ஆறுமுகத்தையே சுற்றி வருகிறது. அவருக்கு போலி சான்றிதழ் தயாரித்துக்கொடுத்ததாக அசோக் என்பவரை கைது செய்திருக்கிறது.   முதல் தகவல் அறிக்கையில் கூட சம்பவம் நடந்த கலைமகள் கல்லூரியின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது! ”

“ஆக.. கல்லூரி நிர்வாகத்தை காப்பாற்றும் முயற்சி நடக்கிறது. அப்படித்தானே! அது ஏனாம்..”

தம்பிதுரை

“சம்பவம் நடந்த கலைமகள் கல்லூரியின் தாளாளர்.. அதாவது அதிபர்..  முதலாளி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின்  மனைவி டாக்டர் பானுமதி!  இந்தத் தகவல் வெளியாகக் கூடாது என்பதற்காகத்தான் பயிற்சி அளித்த ஆறுமுகத்தையே காவல்துறை சுற்றிவருகிறது என்கிறார்கள்!”

“அடப்பாவமே!”

“இன்னும் கேளும்… கைது செய்யப்பட்ட ஆறுமுகம் இப்போது எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை.”.

“ஓ..”

 

பானுமதி

“இன்னொருபக்கம், ஆறுமுகத்தின் குடும்பத்தினர் பயந்துபோய் இருக்கிறார்கள்.  சென்னை பெண் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் மர்ம மரணம் அடைந்தது போல நிகழ்ந்துவிடக்கூடாது என்று அச்சப்டுகிறார்கள்!”

நமது பதிலை எதிர்பார்க்காமல் புறப்பட்டார் நியூஸ்பாண்ட்.




English Summary
Coimbatore student death: To make thambidurai's wife escape the trainer is entangled ?