தென்கொரியாவை சேர்ந்த பிரபல குளோனிங் நிபுணர் டாக்டர் ஹ்வாங் வூ சுக்கின் முயற்சியில் உருவாக்கப்பட்ட மூன்று குளோனிங் நாய்கள் ரஷ்ய போலீசில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

cloning_dogs

தென்கொரியாவின் ஆக்ரோஷமான ஸ்னிஃப்பர் மற்றும் பெல்ஜியன் மலிநோய்ஸ் இனத்தை சேர்ந்த நாய்களின் கலப்பினமாக உருவாக்கப்பட்ட இந்த நாய்கள் ரஷ்யாவின் சைபீரிய குளிருக்கு தாக்குபிடிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் இவை சாதாரண நாய்களை விட அதிக துருதுருப்பாகவும் உடல் உறுதியுடனும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[embedyt] http://www.youtube.com/watch?v=-fzh1pFzXwc[/embedyt]

டாம், மார் மற்றும் ஜாக் என்று பெயரிடப்பட்டுள்ளா இந்து மூன்று ஆண் நாய்களுக்கும் தற்பொழுது ஒரு வயதாகிறது. ரஷ்ய போலீஸில் இவைகள் சேர்க்கப்பட்டுவிட்டாலும் இன்னும் பழக்கப்படுத்தப்படவில்லை சில அடிப்படை சைகைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிகின்றன.

cloning_dogs1

ரஷ்யாவின் சைபீரியா உலகின் அதிக குளிரான பகுதியாகும். தென்கொரியாவில் இருந்து சைபீரியா வந்தடைந்துள்ள இவை குளிரைக் கண்டு அதிகமாகவே பயப்படுகின்றன. வெளியே வரவே இவைகள் அஞ்சுவதாக ரஷ்ய போலீஸ் தரப்பு செய்திகள் கூறுகின்றன.
டாக்டர் ஹ்வாங் வூ சுக் கடந்த 2005 முதல் குளோனிங் நாய்களை உருவாக்கி வருகிறார். இதுவரை 500 குளோனிங் நாய்களை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் மிருகங்களை குளோன் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. குளோனிங் செய்வது மோசமான எதிர்விளைவுகளை தோற்றுவிக்கும் என்று கருதப்படுவதால் அந்நாடுகளில் இது தடை செய்யப்பட்டுள்ளது.