கர்நாடக இசையில் கிறிஸ்துவ இஸ்லாமிய பாடல்கள் : டி.எம்.கிருஷ்ணா சவால்

கர்நாடக இசையில் கிறிஸ்துவ இஸ்லாமிய பாடல்களை தொடர்ந்து பாடுவேன் என்று பிரபல கர்நாடக இசைப் பாடகர்: டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

பிரபல கர்நாடக இசைப் பாடகர் ஓ.எஸ்.அருணின் ‘இயேசுவின் சங்கம சங்கீதம்’ என்ற  இசை நிகழ்ச்சி, வரும் 25ம் தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது.  இந்த நிகழ்ச்சியில், இயேசுநாதரை புகழ்ந்து பாடும் கீர்த்தனைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை சில இந்து அமைப்புகளும், கர்நாடக இசை ரசிகர்களின் ஒரு பிரிவினரும் சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்த்துவந்தனர்.

இதற்கிடையே “சொந்த காரணங்களுக்காக ஆகஸ்ட் 25 நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறL” என்று ஓ.எஸ்.அருண் அறிவித்துள்ளார்.

ஆனாலும் குறிப்பிட்ட பிரிவினரின் எதிர்ப்பு காரணமாகவே அவர் இசை நிகழ்ச்சியை ரத்து செய்ததாக பரவலாக பேசப்படுகிறது.

இதற்கு முன் தேவாலயத்தில் கச்சேரி நடத்திய டி.எம்.கிருஷ்ணா, கிறிஸ்தவ பாடல் பாடிய நித்யஸ்ரீ மகாதேவன், கிறிஸ்தவ பாடல் தொகுப்பை வெளியிட்ட அருணா சாய்ராம் ஆகியோருக்கும் எதிர்ப்பு கிளம்பியது. மதமாற்றம் செய்யும் அமைப்புகளுக்கு இவர்கள் துணை போவதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டனர்.

இந்த நிலையில் அருணின் இசை நிகழ்ச்சிக்கு எழுந்த எதிர்ப்பை கண்டித்த பாடகர் டி.எம். கிருஷ்ணா, இனி ஒவ்வொரு மாதமும் இயேசு அல்லது அல்லாஹ்-வை புகழும் ஒரு பாடலை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

Tags: Christian Islamic songs in Carnatic music : TM Krishna challenge, கர்நாடக இசையில் கிறிஸ்துவ இஸ்லாமிய பாடல்கள் : டி.எம்.கிருஷ்ணா சவால்