காட்மண்டு

நேபாளத்தில் இணைய சேவையில் சீனா இந்தியாவுக்கு போட்டியாக சீனாவும் களமிறங்கி உள்ளது.

இந்திய நிறுவனங்கள் மட்டுமே இது வரை நேபாளத்தில் இணய தள சேவை வழங்கி வந்தன.   ஆப்டிக் பைபர் கேபிள் மூலம் இந்திய நிறுவனங்கள் பிரத்நகர், பைரஹவா மற்றும் பிர்குஞ்ச் உட்பட பல இடங்களில் இந்த சேவை வழஙக்ப்பட்டு வருகிறது.

பீஜிங் மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்களில் நிறுவப்பட்டுள்ள சீனா டெலிகாம் குளோபல் என்னும்நிறுவனம் இன்று நேபாளத்தில் இணைய சேவை வழங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.    சமீபத்தில் நேபாள அரசால் எல்லைப் பகுதியில் ஃபைபர் கேபிள் பொருத்தப் பட்டது.  அந்த கேபிள் தற்போது சீனாவில் உள்ள சீனா டெலிகாம் குளோபல் நிறுவனத்தால் உபயோகப் படுத்தப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து அந்த சீன நிறுவனம், “நாங்கள் தொலை தொடர்புத் துறையில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.  அதன் ஒரு பகுதியாக நேபாளத்தில் இணைய சேவையை தொடங்கி உள்ளோம்.  விரைவில் லாவோஸ், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் எங்கள் இணைய சேவையை தொடங்க உள்ளோம்”  என தெரிவித்துள்ளது.