சீனா: வறுமைக்கெதிராக சீனா தீவிரத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் 1978-2017 வரையில் 740 மில்லியன் கிராமப்புற மக்களை அதிக வறுமை நிலையிலிருந்து விடுவித்து உயர்த்தியிருக்கிறதென்று அந்நாட்டு தேசிய புள்ளியியல் துறை கூறுகிறது.

வறுமையைப் போக்கும் அதன் தீவிரத் திட்டத்தில் அதீத வறுமை நிலை 2020க்குள் முற்றிலும் துடைத்தொழிக்கப் படுமென அதிகாரிகள் கூறினர். இது ஐ.நா. சபை நிர்ணயித்திருக்கும் 2030 ஆண்டை விட 10 வருட காலம் முன்பாக அடையப்படும் ஒன்றாகும்.

“வறுமை நிலை அட்டவணையில் 90 சதவீதம் இந்த டஆண்டிலேயே அகற்றப்படும்“, என்று இதற்கான துறையின் இயக்குநர் லியூ யோங்ஃபு கூறினார். 2018 நிலவரப்படி கிராமப் புறத்தில் வறுமை நிலைக்குட்பட்ட பகுதியிலேயே நகர்ப்புறவாசிகளின் வருமான அளவில் 71 சதவீதம் அடைந்து விட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வறுமைக்கு எதிரான போரை சீனா வலுவான முன்னெடுப்பில் எதிர்கொள்கிறது. சீனாவின் தானிய உற்பத்தி இரண்டு மடங்காகியுள்ளது. 2013-2018 ல் 82.39 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து சீனா மீட்டுள்ளது.