புதுடெல்லி: சர்ச்சைக்குரிய லடாக் பகுதியில், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம், வாக்குறுதியை மீறி இன்னும் முகாமிட்டிருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன ராணுவத்தின் 40000 துருப்புகள், கிழக்கு லடாக் பகுதியின் உள்ளார்ந்த பகுதிகளில் முகாமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பிரச்சினை நடைபெற்ற சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து சீன ராணுவம் வெளியேற வேண்டுமென, இருநாடுகளுக்கும் இடையில் ராணுவம் மற்றும் அரசாங்க மட்டங்களில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளன.
இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளவிலான அதிகாரிகளும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து சீன ராணுவம் வெளியேற வேண்டுமென்ற ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன.
ஆனால், சீன அரசின் தரப்பில் அந்த ஒப்பந்தங்கள் எதுவும் மதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. ஏனெனில், அந்நாட்டு ராணுவத்தின் 40000 துருப்புகள் இன்னும் அப்பகுதியிலேயே நிலைக்கொண்டுள்ளன. பதற்றத்தை தணிக்கும் எண்ணத்தில் சீன ராணுவம் இல்லை என்றே தகவல்கள் கூறுகின்றன.