சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 4ம் தேதி 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளுக்கே  சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், இந்த வார ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் 50ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும்,  மருத்துவம் சார்ந்த காலி பணியிடங்கள் அனைத்தும் இரண்டு மாதத்திற்குள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணயின்,. , தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது பரவி வரும் காய்ச்சலானது பருவநிலை மாற்றத்தால் மட்டுமே ஏற்படுகிறது என்றாலும், இந்த காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த காய்ச்சலானது 3 முதல் 4 நாட்கள் வரை இருக்கும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது என்றவர்,  எந்தெந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமான நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்  நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியானது, மத்திய அரசின் அறிவிப்பின்படி  இந்த மாதம் 30ம் தேதி வரை  தடுப்பூசி முகாமில் போடப்படும்.  இந்த வாரம் 50,000 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் வட்டார சுகாதார நிலையங்கள் என 11,33 மருத்துவமையங்களில் புதன்கிழமை வரும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்றார்.

தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் 96 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 91 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது வரும் அக்டோபர் 4ம் தேதி 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்றார். மேலும், தமிழகத்தில் மருத்துவர்கள் மருத்துவம் சார்ந்த காலி பணியிடங்கள் 4308 காலி பணியிடங்கள் அனைத்தும் இரண்டு மாதத்திற்குள் முழுமையாக நிரப்பப்படும் .

இவ்வாறு கூறினார்.