சென்னை:
புதுமைப் பெண் திட்டத்தின் 2ம் கட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த இரண்டாவது கட்டத்தின் மூலம் மேலும் 1,04,347 மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், புதுமைப் பெண் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்குப்படுகிறது.

இந்நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெறவுள்ள விழாவில், மேலும் 1,04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.