சென்னை: ரூ.114 கோடி மதிப்பில்  மதுரையில் கட்டப்பட உள்ள  கலைஞர் நூலகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த  நூலகத்தில் குழந்தைகளுக்கான படிப்பு அறைகள், நூல்கள் மற்றும் ஒளி, ஒலி காட்சி கூடம், டிஜிட்டல் அறைகள் போன்றவை சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்றதும், மதுரையில் பிரமாண்டமான நூலக்கம் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ரூ.114 கோடி மதிப்பீட்டில், சென்னையில் உள்ள புதிய தலைமைச்செயலகம் வடிவில் பிரமாண்டமான முறையில் கலைஞர் நூலக்கம் அமைக்கப்படும் என்று அரசாணையும் வெளியிடப்பட்டது.

அதன்படி,  2 லட்சம் சதுர அடி பரப்பளவில்  மாடிகளுடன்,  நூலகத்தின் முகப்பு பகுதியில் கருணாநிதியின் வெண்கல சிலையும் நூலக்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த நூலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.  இந்த  நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை சார்ந்த செயலாளர்கள் பங்கேற்றனர்.