சென்னை: தமிழ்நிலம் இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன்மூலம்,  இனிமேல் எங்கிருந்தாலும் பட்டா மாறுதல்களுக்கு இணையத்தளத்தில் விண்ணப்பித்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில்,  சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள், அந்த சொத்தை தங்களது  பெயருக்கு பத்திரப்பதிவு செய்த உடன், அடுத்தபடியாக, அந்த சொத்தின் பட்டாவை மாற்றம் செய்வது வழக்கம். இதில் பல்வேறு தில்லுமுல்லுகள் நடைபெற்று வந்தது. புரோக்கர்கள் நடமாட்டதுடன், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடத்த பட்டா பெறும் நிலை உள்ளது.

இதை மாற்றி, எளிமையாக பட்டா மாறுதல் பெறும் வகையில் தமிழ்நிலம் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நிலம் இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளார்.

பட்டா மாற்றத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிப்பதை எளிக்கும் வகையில் , அதற்கான விண்ணப்பங்கள்  இணையதளத்தில் கிடைக்கின்றன. இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். இதில் குறிப்பிட்ட வசதி என்னவென்றால்,  பட்ட கோருபவர்கள், தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும்  இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

பட்டா கோருபவர்கள், tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையத்தளம் சென்று,  செல்போன், இமெயில், பெயர் பதிர்வு செய்து உள்ளே செல்ல வேண்டும். இந்த இணையதளம் மூலம் உட்பிரிவு , செயலாக்க கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்த ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. கட்டணங்கள் செலுத்தப்பட்டதும் நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும். எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழி சேவை மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். நகர்ப்புற புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.