சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல்துறை அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். அதன்படி,  17 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 444 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாட்டில் புதிதாக 444 சப்-இன்ஸ்பெக்டர்கள், 44 டி.எஸ்.பி.க்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 17 டி.எஸ்.பி.க்களும், சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 444 சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததால் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இவர்களுக்கு பணி நியமனங்களை வழங்கிடும் அடையாளமாக 5 பேர்களுக்கு ஆணைகள் வழங்கினார். பணி நியமனம் பெற்ற 17 டி.எஸ்.பி.க்களில் 13 பேர் பெண்கள் ஆவார்கள். இதே போல் சப்-இன்ஸ்பெக்டர்களில் 133 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.எஸ்.பி. சைலேந்திரபாபு உடன் இருந்தனர்.