ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தினால் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவேன் – சௌமியா

சதுரங்க போட்டியின் இந்திய மகளிர் கிராண்ட் மாஸ்டர் மற்றும் உலக ஜூனியர் செஸ் போட்டியின் முன்னாள் சாம்பியனான சௌமியா சுவாமிநாதன் ஈரான் அரசு ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்துவதாக தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தினால் 2018வது ஆண்டிற்கான ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
chess star
மேலும், ஈரான் நாட்டு ஆரசு தனது தனிப்பட்ட உரிமையுடன் மோத சௌமியா அழைப்பும் விடுத்துள்ளார். கிராண்ட் மாஸ்டர் மற்றும் செஸ் போட்டியின் பயிற்சியாளரான ஆர்.பி. ரமேஷ் சௌமியாவின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த சதுரங்க போட்டியாளர் இது போன்ற ஒரு அழைப்பை முதல் முறையாக விடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

ஈரான் அரசின் சட்டங்கள் தனது அடிப்படை மனித உரிமையை நேரடியாக மீறுவதாக சௌமியா குறிப்பிட்டார். இது குறித்து பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த சௌமியா, ஹிஜாப் அணிய மறுப்பு தெரிவித்தால் ஈரான் நாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க அனுமதிப்பதில்லை. மாறாக போட்டியாளர் வெளியேற்றப்படுகிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

இரண்டு முறை நான் ஈரான் சென்றுள்ளேன். ஒன்று 10 வயதாக இருக்கும் போது மற்றொன்று பருவமடைந்த உடன் போட்டியில் பங்கேற்க சென்றுள்ளேன். 10 வயதாக இருக்கும் போது சில நேரம் ஹிஜாப் அணிந்தும் அணியாமலும் இருந்திருக்கிறேன். அப்பொழுது என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இப்பொழுது போட்டியில் பங்கேற்க சென்றால் பல கட்டுப்பாடுகளை விதிப்பது ஏன் என்று தெரியவில்லை என சௌமியா கேள்விகளை எழுப்புகிறார்.

2011ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க நான் ஈரான் சென்றேன். அப்போது அனைத்து நேரங்களிலும் நான் ஹிஜாப் அணியும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன். சாப்பிடும்போதும், விளையாடும் போதும், ஜாகிங் செய்யும் போதும் ஹிஜாப் அணிந்திருந்தேன். இதனால் நான் மிகவும் அடக்கி வைக்கப்பட்டதாக உணர்ந்தேன். ஒரு நாட்டை சேர்ந்த நபரின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதும், மத ரீதியாக அவர்களை கட்டாயப்படுத்துவதும் சரியான ஒன்றாக இல்லை. மக்களின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். இதே அந்த நாட்டை சேர்ந்த வீரர்கள் இந்தியா வந்தால் அவர்கள் அனைத்து இடங்களுக்கு சென்றாலும் தங்கள் காலணிகளை வெளியே இட வேண்டும் என நாம் கட்டாயப்படுத்தலாம். அவ்வாறு செய்தால் அர்த்தமில்லாமல் போகும் என்றும் சௌமியா கூறியுள்ளார்.

2018ம் ஆண்டிற்காக நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி எனக்கு முக்கியமான ஒன்று, எனது நாட்டை பிரதிநிதித்துவ படுத்துவது கௌரவமாகும். போட்டியின் போது ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தும் ஈரான் அரசு இந்திய மகளிர் அணியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சௌமியா கூறினார்

மேலும் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தினால் எனது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டியிருக்கும். இதற்கான இந்தியா சார்பில் விளையாட விரும்பவில்லை என்றும் சௌமியா விருப்பம் தெரிவித்துள்ளார். இத்தகைய முடிவை எடுத்துள்ள சௌமியாவிற்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. கிராண்ட் மாஸ்டர் மற்றும் சதுரங்க போட்டியின் பயிற்சியாளராக ஆர்.பி.ரமேஷ் சௌமியாவின் முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சௌமியாவின் முடிவிற்கு மதிப்பளித்தாகவும், முதல் முறையாக இந்தியாவில் இது போன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரமேஷ் தெரிவித்தார்.

இது போன்ற நிபந்தனைகளை ஹீனா சிந்துவும் கடந்துள்ளார். 2016ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஏர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற ஹீனா ஹிஜாப் அணியாத காரணத்தினால் ஈரானில் நடைபெற்ற போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-